என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "காஷ்மீர் எல்லை"
- மூன்றாவது நாளாக பயங்கரவாதிகள் தேடு பணி நடந்து வருகிறது.
- பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வாரில் உள்ள சத்ரூ பகுதியில் பயங்கரவாதிகள்-பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் காயமடைந்த 2 வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து பாரமுல்லா மாவட்டம் சக் தாப்பர் க்ரீரி பட்டான் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இதைதொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் ரோமியோ படை மற்றும் எஸ்ஓஜி போலீஸ் ஆகியோர் சேர்ந்து பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் பகுதியில் உள்ள பத்தனாதீரின் மலைப்பாங்கான வனப்பகுதியில் மூன்றாவது நாளாக பயங்கரவாதிகளை தேடு பணி நடந்து வருகிறது.
வனப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகளை பிடிக்க கூட்டு நடவடிக்கை தொடர்கிறது. அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்துள்ளனர். பூஞ்ச் மாவட்டத்தின் மெந்தார் செக்டார் பகுதி முழுவதும் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
பயங்கரவாதிகள் குறித்த தேடுதல் வேட்டையால் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
#WATCH | J&K | A joint operation of Romeo Force of the Indian Army and SOG Police Poonch is underway for the third day in the hilly forest area of Pathanateer in Mendhar sector of Poonch district. The joint operation is ongoing to nab the terrorists hiding in the forest, security… pic.twitter.com/AvH3Mby227
— ANI (@ANI) September 16, 2024
- தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கடந்த வாரம் தான் சோபியான் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று இருந்தனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் உள்ள அனந்த்நாக் மாவட்டம் தங்பாவா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர்.
பாதுகாப்பு படை வீரர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக தாக்கி உள்ளார்கள். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. நேற்று மாலை தொடங்கிய என்கவுண்டர் நள்ளிரவு வரை நீடித்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை நடத்திய அதிரடி தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் பெயர், எந்த பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவர்களை அடையாளம் காணும் பணி நடை பெற்று வருகிறது.
அந்த பகுதியில் மேலும் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் தான் சோபியான் மாவட்டத்தில் 4 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக்கொன்று இருந்தனர். இதில் 3 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். மற்றொரு வன் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்தவன் ஆவான்.
- சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன்.
- பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதிக்கு சென்றனர். அவர்களை பார்த்ததும் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்கள் தாக்குதலில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்தவர் ஆவார்கள்.
சுட்டுக் கொல்லப்பட்ட லஷ்கர் பயங்கரவாதிகளில் லத்தீப் ராதர் மிகவும் முக்கியமானவன். காஷ்மீர் பண்டிட்டுகளான ராகுல் பட், அம்ரீன் பட் உள்பட பல பொதுமக்களை சுட்டுக் கொன்றவன் ஆவான். பாதுகாப்பு படை வீரர்களால் தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான அவன் இன்று சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளான்.
காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் நீண்ட காலமாக அமலில் உள்ளது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த நிலையில் புலவாமாவில் துணை ராணுவத்தினர் மீது நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி 26-ந் தேதி குண்டுவீசி தாக்குதலை தொடுத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது.
இது தொடர்பாக ஒயிட் நைட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் பரம்ஜித் சிங் நேற்று ரஜோரி மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பாலகோட் தாக்குதலுக்கு பிறகான கடந்த 1½ மாத காலத்தில் மட்டும் காஷ்மீர் எல்லையில் ஏறக்குறைய 513 அத்துமீறிய தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் அரங்கேற்றி இருக்கிறது. இதில் பீரங்கி குண்டுகள், நவீன துப்பாக்கிகள் போன்ற கனரக ஆயுதங்களை 100 முறைக்கும் மேலாக பயன்படுத்தி இருக்கிறது. இதைப்போல கிராமப்பகுதிகளையும் தங்கள் இலக்குகளாக்கி இருந்தனர்.
இந்த தாக்குதல்களில் நமது தரப்பில் 4 வீரர்கள் உள்பட 10 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். சுமார் 45 பேர் காயமடைந்து உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் அப்பாவி பொதுமக்கள் ஆவர்.
இந்த தாக்குதல்கள் அனைத்துக்கும் இந்திய தரப்பில் இருந்து சரியான பதிலடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து சரியான விவரங்கள் இல்லை. ஏனெனில் இந்திய ராணுவத்தை போல பாகிஸ்தான் தனது சேத விவரங்களை வெளியில் சொல்லாது.
எனினும் நமக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையில், நமது பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை விட 5 முதல் 6 மடங்கு அதிக சேதம் பாகிஸ்தானுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.
இந்திய பகுதிகளை நோக்கி பாகிஸ்தான் தரப்பில் இருந்து குறிபார்த்து சுடும் சம்பவங்கள் கடந்த பிப்ரவரி 27-ந் தேதிக்கு பிறகு நடைபெறவில்லை. இதற்கு நாம் மேற்கொண்ட வெற்றிகரமான பாதுகாப்பு நடவடிக்கைகளே காரணம் ஆகும்.
இவ்வாறு பரம்ஜித் சிங் கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலில் ராணுவ வீரர்களின் செயல்பாட்டை வைத்து பிரசாரம் மேற்கொள்ளப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பரம்ஜித் சிங், இந்த விவாதத்தில் தலையிட ராணுவம் விரும்பவில்லை எனக்கூறினார். இதைப்போல ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கமாட்டோம் என்றும் பரம்ஜித் சிங் உறுதிபட தெரிவித்தார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணா பள்ளத்தாக்கு பகுதியை ஒட்டியுள்ள எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த தாக்குதல் 7 மணிக்கு முடிவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனினும், எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தலாம் என்பதால் இந்திய படை உஷார்படுத்தப்பட்டுள்ளது. #PakistanCeasefireViolation #JammuAndKashmir
இந்த தாக்குதல் இந்திய மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பயங்கரவாதிகளுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானுக்கும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். புல்வாமா தாக்குதலுக்கு உரிய நேரத்தில் பதிலடி கொடுக்கப்படும் என மத்திய அரசும் கூறியிருந்தது. எனவே, சர்ஜிக்கல் ஸ்டிரைக் போன்று எல்லைப்பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.30 மணியளவில் இந்திய விமானப்படை விமானங்கள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து குண்டுகளை வீசின.
இந்திய விமானப்படையின் 12 போர் விமானங்கள் (மிராஜ் 2000) இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகள் வீசப்பட்டதில், பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. #IAFAttack #LoC
காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள திக்வார் பகுதியில் எல்லைப்பகுதியில் நேற்று இந்திய ராணுவத்தினர் வழக்கம்போல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்திய நிலைகளை நோக்கி திடீரென துப்பாக்கிசூடு நடத்தினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த நமது ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இருதரப்புக்கும் இடையே சில மணி நேரம் துப்பாக்கிச்சண்டை நீடித்தது.
இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவித காயமோ, சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 11-ந் தேதி பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்திய வீரர் ஒருவர் காயம் அடைந்தது குறிப்பிடத்தக்கது. #India #Pakistan #JammuKashmir
ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் சந்தேகப்படும்படியான நபர்கள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதனையடுத்து ஜம்மு பிராந்தியம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. அதேசமயம் ஜம்மு காஷ்மீர் எல்லை வழியாக ஊடுருவும் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில், பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது இந்திய நிலைகளை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லை வழியாக இன்று பயங்கரவாதிகள் ஒரு குழுவாக ஊடுருவ முயன்றனர். போபியான் பகுதியில் அவர்களின் நடமாட்டம் கண்டறியப்பட்டதை அடுத்து, அவர்களை நோக்கி எல்லைப் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். எதிர்முனையில் இருந்து பயங்கரவாதிகளும் துப்பாக்கியால் சுட்டனர்.
பிரதமர் மோடி வரும் 19-ம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால் எல்லையில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #KashmirInfiltrationBid #BSF
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்